RSS

05/09/2013

குலுக்கிய கைகள்

தலைவர் தேர்தல்: Chancellor Election.
*******************************
ஜேர்மனியில் வரும் 22ந்திகதி(22.9.13) அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு ஆட்சி செய்யப்போகும் தலைவர் யார்? என்பதற்கான தேர்தல் நடைபெற இருக்கின்றது. இத்தலைவர் பதவிக்கு
ஜேர்மனியின் தற்போதைய  Chancellor ம்,கிறிஸ்தவ ஜனநாயக்கட்சியின் தலைவியுமான (Christian Democratic Union. CDU)  அங்கேலா மார்க்கல்Angela Merkel (Angie ) அம்மையாரும்,
எதிர்கட்சியான சமூக ஜனநாயக்கட்சியின் (Sozialdemokratische Partei Deutschlands SPD) வேட்பாளராக Peer Steinbrück  பீர் ஸ்டைன்புறுக்  ம்  போட்டியிடுகிறார்கள். 
 _____________________________________________________
அதற்கான பிரச்சாரவேலைகள் ஆரம்பித்துவிட்டன.
நகரங்கள், கிராமங்கள் தோறும் சென்று, தங்கள்  கட்சியையும், தலைவர் பதவிக்காக, தங்கள் கட்சியின் வேட்பாளரையும்  வெற்றி பெறச் செய்வதற்கான பிரச்சாரங்கள்   நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
  
 அங்கேலா மார்கலின் (CDU) கட்சியே நாங்க இருக்கும் இடத்தில் ஆட்சியில் இருக்கிறது. அந்த கட்சி ஆதரவாளர் இங்கு அதிகம். தனது பிரச்சாரத்தினை  நடாத்த கடந்த வெள்ளியன்று எங்கள் இடத்துக்கு அங்கேலா மார்க்கல் வந்திருந்தார். நீண்டகாலத்தின் பின் எங்கட ஊருக்கு வரும் தலைவர். நாங்களும் அப்பிரச்சாரக் கூட்டத்துக்கு   போயிருந்தோம் .  
மெரிக்க அதிபர் ஒபாமா , பிரான்ஸ் நாட்டு தலைவர் François Hollande பிரித்தானியாவின் தலைவர் டேவிட் கமரூன் இப்படி பல நாட்டு தலைவர்களது கைகளை, குலுக்கிய  கைகள் என் கையையும் குலுக்கியது  . 

 நான் அங்கேலா மார்க்கலைப்பார்க்கும் ஆவலில்தான்  சென்றேன்.  கை குலுக்குவேன் எனஎதிர்பார்க்கவேயில்லை. அவர் மேடைக்குச் செல்லாது மக்கள் நின்ற பக்கமாக வந்து, எல்லாருக்கு கைகொடுத்து தனது மகிழ்ச்சியை தெரிவித்தார். என்  கையையும் பிடித்துக் குலுக்கினார்.
  அங்கு நின்றவர்கள் படம் எடுக்க கேட்டதற்கு,நேரம் போதாது, மன்னிக்கவும் என்று சொல்ல.பாதுகாப்பு அதிகாரிகள் அவரை  விரைவாக மேடைக்கு அழைத்து சென்று விட்டனர்.

 கணவர், மகன் பின்புறமாக நின்றனர்.அவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. எனக்கு அவரை அறிந்த காலத்திலிருந்தே பிடிக்கும். அவர் இது 3ம் முறை தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.2முறையும் நான் அவருக்கே வாக்களித்திருந்தேன். இம்முறையும் அவருக்கே என் வாக்கு. ஐரோப்பாவின்   "STRONG WOMAN " என வர்ணிக்கப்படுபவர் .
                              எங்க இடத்தில் நடந்த பிரச்சாரக்கூட்டம்
                           ****************************
2 கிழமைக்கு முன்னர்தான் விடுமுறைக்கு போலந்துநாட்டுக்கு Poland போய்விட்டு வரும் வழியில் பேர்லின்(BERLIN) சென்று, நான்கு நாட்கள்  தங்கி, சுற்றிப்பார்த்து விட்டு வந்தோம். எனது நீண்ட நாள் விருப்பம் தலைநகரை பார்க்கவேண்டும் என்பது . அப்போது பாராளுமன்றத்தை  பார்க்கும் போது நான் என் கணவரிடம் சொன்னேன்."ஒருதரமேனும் அங்கேலாவை பார்க்கவேணும் என்று"ஆனா இவ்வளவு  சீக்கிரம் அது நிறைவேறுமென கனவு கூட காணவில்லை. என்னைப் பொறுத்தவரை  "இது மறக்கமுடியாத,மகிழ்ச்சிக்குரிய விடயமாக கருதுகிறேன் .                                 
                           ஜேர்மனி பாராளுமன்றம்
******************************************************
வாக்களிக்க வாக்காளர் அட்டையும் வந்தாச்சு. 
இங்கு வாக்களிக்கும் இயந்திரம் இல்லை .வாக்குச்சீட்டில் புள்ளடி × தான்    இடவேண்டும். 
                                                             tks:google
அந்தந்த இடத்தில் வாக்குகள் எண்ணப்பட்டு உடனேயே கணனியூடாக அனுப்பிவைப்பார்கள். மாலை 6 மணிக்கு ஓரளவு யார் வெற்றி   பெறக்கூடும் என்பது தேர்தல் கணிப்பின் மூலம் (Wahl Prognose) தெரியவரும். தனித்து ஆட்சியா, கூட்டணியா, போன்ற எல்லா விபரங்களும் அன்றிரவே  அறிவித்து  விடுவார்கள்.  22 ந்திகதி வரை பொறுத்திருக்க வேண்டும்.

                    ***************************************

 
 
Copyright பிரியசகி