RSS

11/03/2016

கண்ணீர் அஞ்சலி

கண்ணீர் அஞ்சலி.

இளையநிலா தளத்தில்  மரபுகவிதை,வெண்பா புனைந்து குறுகிய காலத்தில் நிறைய நட்புகளின் அன்பையும், நட்பையும் சம்பாதித்தவர் இளமதி. பிரான்ஸ் பாட்டரசர் கி. பாரதிதாசன் ஐயாவின் மாணவியாவார்.

இவரின் வாழ்வில் ஏற்பட்ட பெரும் துயரம் அவரது கணவர் விபத்தொன்றில் சிக்கி கடந்த 14 வருடமாக கோமா நிலையிலிருந்தமை. இந்நிலையில் இளமதியின் கணவர் கடந்த திங்கட்கிழமை சிவராத்திரி அன்று இறையடி சேர்ந்தார். 
அன்பு நண்பி இளமதியின் கணவரது ஆன்ம சாந்திக்காகவும், நண்பி இளமதி மீளாதுயரத்தில் இருந்து விடுபட்டு மீண்டு வரவேண்டும் என  எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போம்...



 அன்னாரின் அஞ்சலி நிகழ்வுகள் வெள்ளி(இன்று) 11.03.16 அன்று நடைபெறுகின்றது.

12/02/2016

கடற்கரை.


K.K.S (kankesanthurai) என சுருக்கமாக அழைக்கப்படும் காங்கேசன்துறை யாழ்ப்பாண மாவட்டத்தில் மிக பிரபல்யமான ஊர். கடற்கரை ஊர். இலங்கையின் பெரிய சீமெந்து(Cement) பாக்டரி இருந்த இடம். கொழும்பில் இருந்து புறப்படும் ரெயின் கடைசியாக நிற்பதும், முதலில் புறப்படுவதுமான ஸ்டேசன் இருக்கும் ஊர். வடபகுதிக்கான பெரிய துறைமுகம்  உள்ள ஊர். இதன் அருகில் இருக்கும் ஊர்கள் பலாலி, கீரிமலை. பலாலியில்தான் வடபகுதிக்கான விமான நிலையம் இருக்கின்றது.

மிக நீண்ட காலமாக போகமுடியாமல், கடுமையான இராணுவ கட்டுப்பாட்டுடன் இருந்த ஊர். இங்கு இருந்த சீமெந்து பாக்டரியை பார்க்க  பாடசாலையிலிருந்து சின்ன வகுப்பில் அழைத்துச்சென்றார்கள். அப்படி சென்றதுதான். அதன்பின் போகமுடியாதபடி சூழ்நிலை அமைந்துவிட்டது.


கடந்த வருடம் ஊருக்கு சென்றபொழுது, நீண்ட காலத்துக்குபின் கே.கே.எஸ் க்கு போக சந்தர்ப்பம் கிடைத்தது.  அங்கு இப்போ நிறைய சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.







                               



                                     அடம்பன் கொடி
 

போகும்வழியில் மாவிட்டபுரம் எனும் ஊர் கழிந்து ஓர் இடத்தில் செல்லும் வாகனங்களை மட்டும் இராணுவத்தினரிடம் பதிந்துவிட்டு செல்லவேண்டும். அதிலிருந்து கே.கே.எஸ் கடற்கரை செல்லும் வரை பாதை இருமருங்கும் இராணுவத்தினர்தான் இருக்கிறார்கள். ஆனாலும் செல்லமுடிகிறது.

இங்கு இருந்த சீமெந்து பாக்டரி இலங்கையில் மிகப்பெரிய பாக்டரி. அது இப்போ இருக்கும் நிலையை பார்த்தால் கண்களில் கண்ணீர் தழும்புகிறது. எத்தனைபேருக்கு வாழ்வளித்த தொழிற்சாலை. இப்போ அது வாழ்விழந்து நிற்கின்றது.
என்னதான் அங்கு செல்ல கிடைத்தாலும்,  எனக்குள் ஏதோ இனம்புரியாத வேதனை ஏற்பட்டது உண்மை. சந்தோஷம், மகிழ்ச்சி இல்லை. அது திரும்ப கிடைக்கப்போவதுமில்லை.
******************************************************
     
                    

15/01/2016

பொங்கல் நல்வாழ்த்துக்கள்

நட்புறவுகள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!







****************************************************

 
Copyright பிரியசகி